கோலாலம்பூர்:
கெடா மற்றும் பெர்லிஸில் வெள்ளம் காரணமாக வாழ்விடங்களைவிட்டு வெளியேற்றப்பட்டவர்களின் எண்ணிக்கை நேற்று இரவை விட இன்று (அக் 12) காலை 8 மணி நிலவரப்படி குறைந்துள்ளது. அதே நேரத்தில் பேராக் மற்றும் ஜோகூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மாறாமல் உள்ளது.
சமீபத்தில் பாதிக்கப்பட்ட மாவட்டமாக பாலிங் இருக்கிறது, இங்கு வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 912 குடும்பங்களைச் சேர்ந்த 2,952 பேராகக் குறைந்துள்ளது, இந்த எண்ணிக்கை நேற்றிரவு 938 குடும்பங்களைச் சேர்ந்த 3,051 பேராக இருந்தது.
பாதிக்கப்பட்ட ஐந்து மாவட்டங்களைச் சேர்ந்த அனைவரும் தற்போது 22 தற்காலிக நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்று, கெடா மாநில குடிமைத் தற்காப்புப் படையின் துணை இயக்குநர் மேஜர் முஹமட் சுஹைமி முகமட் ஜைன் கூறினார்.








