அதிகாலை ஏற்பட்ட தீயில் நாசமான கோல க்ராய் பசார் பெசாரின் மேற்கூரை

கோல க்ராய் பசார் பெசார் (பெரிய சந்தை) திங்கள்கிழமை (அக். 14) அதிகாலை தீப்பிடித்து எரிந்ததால், சந்தையின் மேல் பகுதி முற்றிலும் எரிந்து நாசமானது. கோல க்ராய் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தின் தலைமை உதவி தீயணைப்பு கண்காணிப்பாளர் நிக் அஹ்மத் அஃப்ஷாம் நிக் பா கூறுகையில், தீ விபத்து கட்டிடத்தின் மேல் அமைப்பில் 80 சதவீதத்தை பாதித்துள்ளது. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயமோ அல்லது உயிரிழப்போ ஏற்படவில்லை.

அதிகாலை 1.21 மணியளவில் தீயணைப்புத் துறைக்கு அவசர அழைப்பு வந்ததாகவும், அதன் பிறகு ஐந்து தீயணைப்பு வாகனங்கள் மற்றும் 25 பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார். வந்தவுடன், சந்தையின் பெரும்பகுதி குறிப்பாக மேல் பகுதி, ஏற்கெனவே தீயால் எரிக்கப்பட்டதை நாங்கள் கண்டறிந்தோம் என்று அவர் சினார் ஹரியனை தொடர்பு கொண்டபோது கூறினார்.

அதிகாலை 2.06 மணியளவில் தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுப்படுத்தியதாகவும், அதிகாலை 3.42 மணியளவில் தீ முழுமையாக அணைக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். காலை 5.17 மணிக்கு தீயை அணைக்கு பணி முடிந்தது. மொத்த இழப்பு மற்றும் தீ விபத்துக்கான காரணம் இன்னும் விசாரணையில் உள்ளது என்று அவர் மேலும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here