கோத்தா பாரு:
RM49.17 மில்லியன் மதிப்புள்ள 600 கிலோகிராம் யாபா மாத்திரைகள் மற்றும் ஹெரோயின் ஆகியவற்றை கடத்தியதாக சந்தேகிக்கப்படும் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
இந்த ஆண்டு மலேசியாவில் கைப்பற்றப்பட்ட மிகப்பெரிய அளவிலான போதைப்பொருள் கைப்பற்றல் இதுவென்றும், இதில் 652.4 கிலோ யாபா மாத்திரைகள் மற்றும் 2.6 கிலோ ஹெரோயின் கைப்பற்றப்பட்டது என்றும் அவர் சொன்னார்.
குறித்த 32 வயதான வேலையற்ற நபர் கடந்த திங்கட்கிழமை சலோர், பாசீர் மாஸில் உள்ள ஒரு வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டார் என்றும், அவர் ஓட்டப்பந்தய வீரர் என்று, இன்று கிளந்தான் போலீஸ் தலைமையகத்தில் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் மாநாட்டில் கூறினார்.









