வெளிநாட்டுக் கட்டுமான ஊழியர்களை நிர்வகிக்க புதிய முறை அமல்

கோலாலம்பூர்:

கட்டுமானத் துறையில் பணிபுரியும் வெளிநாட்டு ஊழியர்களை நிர்வகிக்க உதவும் நோக்கில், மலேசியக் கட்டுமானத் துறை மேம்பாட்டு வாரியம் புதியதொரு முறையை அறிமுகப்படுத்தியுள்ளது.

அந்த ஊழியர்கள் தங்கள் தாய்நாட்டில் கட்டுமானத் தேர்ச்சிச் சான்றிதழ் பெற்று, அதனை வாரியம் சரிபார்த்து உறுதிப்படுத்தியதும், பயோமெட்ரிக் முறைப்படி பதிவுசெய்ய அம்முறை அழைப்பு விடுக்கிறது.

உரிய கல்வித்தகுதி பெற்றுள்ள வெளிநாட்டு ஊழியர்கள் மட்டும் கட்டுமானத் துறையில் பணிபுரிவதை அம்முறை உறுதிசெய்யும் என்றும் குறித்த வாரியம் தெரிவித்தது.

வெளிநாட்டு ஊழியர்களின் தங்குமிடம் உள்ளிட்ட அவர்களின் நல்வாழ்வைக் கண்காணிக்கவும் புதிய பதிவுமுறை உதவும் என்றும் அது கூறியுள்ளது.

வேலைவாய்ப்பு, சுகாதாரம் சார்ந்த பல்வேறு சட்டங்களுக்கு நிறுவனங்கள் இணங்கி நடக்கின்றனவா என்பதைக் கண்காணிக்க உதவவும் ஊழியர்கள் நலமாக, பாதுகாப்பாக இருப்பதை உறுதிப்படுத்தவும் புதிய முறை உதவும்.

இப்புதிய முறை இன்னும் கட்டாயமாக்கப்படவில்லை என்றும் ஆயினும், தங்கள் ஊழியர்களைப் புதிய முறையின்கீழ் பதிவுசெய்யும்படி நிறுவனங்களைத் தமது அமைச்சு ஊக்குவிக்கிறது என்றும் பொதுப்பணி அமைச்சர் அலெக்சாண்டர் நந்தா லிங்கி தெரிவித்தார்.

இவ்வாண்டு செப்டம்பர் மாத நிலவரப்படி, மலேசியாவில் பதிவுசெய்யப்பட்ட வெளிநாட்டுக் கட்டுமான ஊழியர்கள் 465,591 பேர் உள்ளனர் என்றும் அவர்களில் 150,699 பேர் கோலாலம்பூரிலும் 166,456 பேர் சிலாங்கூரிலும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here