ஜார்ஜ் டவுன்:
பினாங்கில் 233 வெள்ள அபாயம் கொண்ட இடங்களை தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை கண்டறிந்துள்ளது, எனவே 2,000க்கும் மேற்பட்ட பணியாளர்கள் மற்றும் 100க்கும் மேற்பட்ட படகுகள் இந்த பருவமழைக் காலம் முழுவதும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை நடவடிக்கைகளின் துணை இயக்குனர் கைரி சுலைமான் கூறினார்.
தற்போது எங்களிடம் 863 பணியாளர்கள் உள்ளனர், கூடுதலாக 1,354 தன்னார்வ தீயணைப்பு வீரர்களும் குறித்த காலப்பகுதியில் தயாராக இருப்பார்கள் என்று அவர் மேலும் கூறினார்.
பினாங்கில் திடீர் வெள்ளம் ஏற்பட்டால், அந்த நிலைமையை சமாளிக்க கடலில் ஒரு மீட்புப் படகு உள்ளது என்றும், அத்துடன் 26 சிறிய படகுகளும் உள்ளன என்றார், கூடுதலாக 33 பிக்-அப் டிரக்குகள் மற்றும் 10 லோரிகள் என அனைத்தும் சிறந்த நிலையில் உள்ளன என்று அவர் சொன்னார்.
“தேவைப்பட்டால், கப்பாலா பத்தாஸில் உள்ள விமானப்படை தளத்தில் நிறுத்தப்பட்டுள்ள ஹெலிகாப்டர் பயன்படுத்த தயாராக உள்ளது என்றும் அவர் சொன்னார்.
“இந்த காலகட்டத்தில், கடலுக்கு செல்பவர்களும், கடற்கரையோரம் நடவடிக்கைகளை மேற்கொள்பவர்களும் எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்துகிறோம் என்றார் அவர்.









