கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் ஏற்பாட்டில் 50 சிறுவர்களுக்கு புத்தாடை

வறுமையை முற்றாக ஒழிக்க முடியா விட்டாலும் வசதி குறைந்தவர்களுக்கு ஒரு சிறிய ஒளியை வழங்க முடியும் என்பதனை  யாரும்  மறுக்க முடியாது. அதிலும் தீபாவளி என்றாலே முதலில் நினைவிற்கு வருவது புத்தாடை. குடும்பத்தில் பெரியவர்கள்  தங்களுக்கு புத்தாடை எடுக்காவிட்டாலும் தங்களின் பிள்ளைகளுக்கு புத்தாடை கட்டாயம் எடுத்து கொடுத்து இத்தீப திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாட வேண்டும் என்பது அனைத்து பெற்றோர்களின் அவா.

அப்பெற்றோர்களின் அவா, ஆசையை பூர்த்தி செய்யும் கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் வி.கணபதி ராவ் ஏற்பாட்டில் வசதி குறைந்த குடும்பங்களை சேர்ந்த 50 சிறுவர்களுக்கு  கிள்ளான் ஶ்ரீ ராசி பட்டுமாளிகையில் அவர்களுக்குப பிடித்தமான ஆடையை எடுத்து கொள்ளும் வாய்ப்பு வழங்கப்பட்டது. இது குறித்து கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் கூறுகையில் வசதியானவர்கள் தீபாவளியை சிறப்பாக கொண்டாடுவது போல் வசதி குறைந்தவர்கள் குறிப்பாக சிறுவர்கள் இத்திருநாளை கொண்டாட வேண்டும் என்ற நோக்கத்தில் ஏற்பாடு செய்யபட்டது என்றார்.

கிள்ளான் ஶ்ரீ ராசி பட்டு மாளிகையின் உரிமையாளர் கே.எஸ்.மணியம் கூறுகையில் 50 சிறுவர்களுக்கு அவர்களின் விருப்பமான ஆடையை எடுத்து கொண்டனர். அந்த ஆடைகளை நாங்கள் அடக்க விலைக்கே (நாங்கள் வாங்கிய விலைக்கே) அவர்களுக்கு வழங்கினோம். இது எங்களால் முடிந்த சமூக சேவையாக கருதுகிறோம். மேலும் நம் வீட்டு பிள்ளைகளை போல் வசதி குறைந்த குடும்பத்தை சேர்ந்த பிள்ளைகளும் இத்தீப திருநாளை மகிழ்ச்சி கொண்டாடி மகிழ வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.

கிள்ளான் ஶ்ரீ ராசி பட்டுமாளிகையில் சார்பில் அனைவருக்கு இனிய தீபாவளி நல்வாழ்த்துகளை தெரிவித்து கொண்டார் K.S.மணியம்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here