ஹோட்டல்களில் விருந்தினர்கள் 23 மணிநேரம் முழுவதுமாக தங்கியிருக்கும் வகையில் நடைமுறையை மேம்படுத்த  வேண்டும் – தியோ

ஹோட்டல்களில் விருந்தினர்கள் 23 மணிநேரம் முழுவதுமாக தங்கியிருக்கும் வகையில் நடைமுறையை மேம்படுத்த  வேண்டும் என்று டத்தோஸ்ரீ தியோங் கிங் சிங் கூறுகிறார். சுற்றுலா, கலை மற்றும் பண்பாட்டுத்துறை அமைச்சர் இந்த திட்டத்தை தனது முகநூல் கணக்கில் வெளியிட்ட பதிவில், ஹோட்டல்கள் தங்களுடைய செக்-இன் மற்றும் செக்-அவுட் நேரங்களைச் சரிசெய்து கிட்டத்தட்ட ஒரு நாள் முழுவதும் தங்குவதற்கு அனுமதிக்குமாறு அழைப்பு விடுத்தார்.

அண்மையில் அக்டோபர் 17ஆம் தேதி நாடாளுமன்றத்தில் ஹோட்டல் தொழில் சங்கப் பிரதிநிதிகளுடன் நடந்த சந்திப்பின் போது இந்த மாற்றத்திற்காக நான் வாதிட்டேன். இந்த மாற்றம் தேவைப்படக்கூடிய பணியாளர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய மனித வள அமைச்சகம் மற்றும் உள்துறை அமைச்சருடன் பேச்சு நடத்தும் என நான் எதிர்பார்க்கிறேன் என்று அவர் சனிக்கிழமை (அக். 19) கூறினார்.

அத்தகைய கொள்கையானது அனைத்துலக அளவில் பொதுவானது என்றும், பொதுவாக மதியம் 2 மணிக்கு செக்-இன் செய்து, மறுநாள் மதியம் அல்லது 1 மணிக்குள் செக்-அவுட் செய்வதுடன், தூய்மை அல்லது தரத்தில் சமரசம் செய்யாமல் இருக்கு வேண்டும் என்றும் தியோங் கூறினார். அப்போது அமைச்சர், ஹோட்டல்கள் செலவுகள் மற்றும் லாபத்தைப் பற்றி கவலைப்படலாம். ஆனால் வாடிக்கையாளர் திருப்தியும் முக்கியமானது என்பதை நினைவூட்டினார்.

விருந்தினரின் அதிருப்தியானது, ஹோட்டல்கள் சேவையின் தரத்தை விட லாபத்தை முதன்மைப்படுத்துகின்றன என்ற கருத்துக்கு வழிவகுக்கும். நேர்மறையான விருந்தினர் அனுபவம் பெரும்பாலும் ஹோட்டல் உரிமையாளர்களுக்கு அதிக லாபம் ஈட்டுகிறது  என்று அவர் கூறினார். வெளிநாட்டு ஊழியர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்காக மனிதவள மற்றும் உள்துறை அமைச்சகங்களுடன் உரையாடல்களை எளிதாக்குவதன் மூலம் ஊழியர்களின் பிரச்சினைகளுக்கு ஹோட்டல் உரிமையாளர்களுக்கு உதவுவதாக அவர் கூறினார்.

விருந்தோம்பல் துறை தற்போது வெளிநாட்டு ஊழியர்களை ஆட்சேர்ப்பதில் வரம்புகளை எதிர்கொள்கிறது. ஹோட்டல்களுக்கு நேரடியாக ஆட்சேர்ப்பு செய்வதற்கான செயல்முறையை எளிதாக்குவது உட்பட, இந்த சவால்களை எதிர்கொள்ள நான் உத்தேசித்துள்ளேன் என்று அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here