41ஆவது தொற்றுநோயியல் வாரத்தில் டிங்கி வழக்கு சற்று தணிந்துள்ளது

புத்ராஜெயா: அக்டோபர் 6-12 வரையிலான 41ஆவது தொற்றுநோயியல் வாரத்தில் (ME41) டிங்கி நோயாளிகளின் எண்ணிக்கை சற்று தணிந்துள்ளது. முந்தைய வாரத்தில் 1,639 ஆக இருந்த டிங்கி நோயாளிகளின் எண்ணிக்கை 1,624 ஆகக் குறைந்துள்ளது. கடந்த வாரத்தில் ஒரு மரணம் பதிவாகியுள்ளது. சுகாதார  தலைமை இயக்குநர்  டத்தோ டாக்டர் முஹம்மது ராட்ஸி அபு ஹாசன் கூறுகையில், கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் 94,181 டிங்கி வழக்குகளில் இருந்து, ME41 வரை பதிவான டிங்கி வழக்குகளின் மொத்த எண்ணிக்கை 106,773 ஆக இருக்கிறது.

ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 20) அவர் ஒரு அறிக்கையில், இன்று வரை டிங்கியினால் 96 இறப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 2023 ஆம் ஆண்டில் இதே காலகட்டத்தில் 67 இறப்புகள் அதிகரித்துள்ளன. ME41 இல் பதிவுசெய்யப்பட்ட ஆபத்தான இடங்களின் எண்ணிக்கை முந்தைய வாரத்தில் 35 ஆக இருந்த நிலையில், 38 ஆக அதிகரித்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். இதில், சிலாங்கூரில் 22, நெகிரி செம்பிலானில் ஐந்து, பினாங்கில் 4, சபாவில் இரண்டு, கோலாலம்பூர், புத்ராஜெயா, பகாங், பேராக் மற்றும் கிளந்தான் ஆகிய இடங்களில் தலா ஒன்று என்று அவர்  தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here