ராமேஸ்வரி ராஜா தி. மோகன்
பிர்க்பீல்ட்ஸ், கோலாலம்பூர், சிலாங்கூர் மாநிலங்களிலிருந்து 17 தமிழ்ப்பள்ளிகளைச் சேர்ந்த 60 மாணவர்கள் ஒருவருக்கு தலா ரிங்கிட் மதிப்பிலான தீபாவளி புத்தாடைகளும் 100 ரிங்கிட் அன்பளிப்பையும் கல்வி அமைச்சர் ஃபட்லினா சிடேக்கிடமிருந்து பெற்றுக்கொண்டனர்.
இங்குள்ள ராஜி சில்க் பேலஸில் மாணவர்கள். ஆசிரியர்கள். பெற்றோரை நேரடியாகச் சந்தித்து தீபாவளி வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்ட அவர் பண்டிகைக்கான ஏற்பாடுகள் குறித்தும் அளவளாவி மகிழ்ந்தார்.
மகிழ்ச்சிகரமான மன நிலையில் குடும்பத்துடன் இணைந்து அனைவரும் தீபாவளி பண்டிகையை கொண்டாட வேண்டும். அதிலும் பிள்ளைகள் குதூகலமாக இருக்க வேண்டும். அதில் இங்குள்ள பி40 பிரிவு அல்லது வறுமைக்கோட்டின் கீழ் உள்ள மாணவர்கள் அந்த மகிழ்ச்சியிலிருந்து விடுபட்டுவிடக்கூடாது எனும் நோக்கத்தில் இதனை ஏற்பாடு செய்ததாக அமைச்சர் தெரிவித்தார்.
மாணவர்கள் அவரவர் விருப்பத்திற்கு 200 ரிங்கிட் மதிப்பில் தங்களுக்குத் தேவையான புத்தாடைகளைத் தேர்வு செய்துகொள்ள வழிவகுத்ததாக தெரிவித்த ஃபட்லினா, பின்னர் அன்பளிப்பாக தலா 100 ரிங்கிட்டையும் மாணவர்கள் கையில் ஒப்படைத்தார்.
பி40 பிரிவைச் சேர்ந்த மாணவர்கள் அல்லது தனித்து வாழும் தாய் தந்தையரின் பிள்ளைகள் போன்றதன் அடிப்படையில் தமிழ்ப்பள்ளிகளின் மாணவர்கள், கோலாலம்பூரின் 15 தமிழ்ப்பள்ளிகளைச் சேர்ந்த சிலாங்கூர் மாநிலத்தில் 2 மாணவர்களும் தேர்வு செய்யப்பட்டிருந்தனர்.
மேலும் ஸ்தாப்பாக் அன்பு இல்லத்திலிருந்து 12 மாணவர்களும் கெப்போங் கருணை இல்லத்திலிருந்து 22 மாணவர்களும் உதவி பெற்றவர்களில் அடங்குவர்.