கிள்ளான்:
மேற்கு துறைமுகத்திற்குச் செல்லும் சாலையில், ஜாலான் பூலாவ் இண்டாவில் காருடன் லோரி மோதிய விபத்தில் இருவர் காயமடைந்தனர்.
இன்று வெள்ளிக்கிழமை (அக் 25) அதிகாலை 3.21 மணியளவில் இந்தச் சம்பவம் நிகழ்ந்ததாக சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை துணை இயக்குநர் அமாட் முக்லிஸ் முக்தார் தெரிவித்தார்.
“விபத்தைத் தொடர்ந்து 40 வயதுடைய ஒரு ஆணும் 36 வயது பெண்ணும் அவர்களது காரில் சிக்கிக்கொண்டனர் என்றும், தீயணைப்பு வீரர்கள் அவர்களை பாதுகாப்பாக மீட்டு, காயமடைந்த அவர்களுக்கு ஆரம்ப சிகிச்சையளித்தனர்,” என்று அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறினார்.
மேலும் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் என்றார் அவர்.









