கோலாலம்பூர்:
தீபகற்ப மலேசியாவின் வடக்குப் பகுதிகளிலும் சரவாக்கின் சில பகுதிகளிலும் இன்று இடியுடன் கூடிய மழை, பலத்த காற்று வீசக்கூடும் என்று மலேசிய வானிலை ஆய்வு மையம் (மெட்மலேசியா) தெரிவித்துள்ளது.

அதேநேரம் பெர்லிஸில் நண்பகல் வரை வானிலை மோசமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று, இன்று செவ்வாய்க்கிழமை (அக் 29) வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் அது தெரிவித்துள்ளது.







