38 நாய்களை ஒரே நேரத்தில் வாக்கிங் அழைத்து சென்று சாதனை

டொரன்டோ:

கனடாவை சேர்ந்த விலங்குகள் நல ஆர்வலர் மிட்செல் ரூடி என்பவர், ஒரே சமயத்தில், 38 நாய்களை, சுமார் ஒரு கிலோமீட்டர் துாரம் வரை வாக்கிங் அழைத்து சென்று, கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார். இணையத்தில் வைரலாகி வரும், இவரின் வீடியோவை பார்த்து, ‘இது அல்லவோ சாதனை’ என பலரும் புகழ்ந்துள்ளனர்.

கனடாவை சேர்ந்த ‘போங்க்’ (BONK) மற்றும் ‘கொரிய கே9 மீட்பு அமைப்பு’ (KK9R) இணைந்து, இறைச்சிக்காக நாய்கள் கொல்லப்படுவதை தடுக்கவும், மீட்கப்படும் பப்பிகளை பராமரிக்க வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைக்கும் வகையிலும், கடந்த செப். 5 ம் தேதி, தென்கொரியாவில் உள்ள கோசன் நகரில், கின்னஸ் சாதனை நிகழ்வை நடத்தியது.

இதில், கனடாவை சேர்ந்த மிட்செல் ரூடி என்பவர், ஒரே சமயத்தில், 38 தெருநாய்களை, கிட்டத்தட்ட ஒரு கிலோமீட்டர் துாரம் வரை, வாக்கிங் அழைத்து சென்றுள்ளார். இதற்கு முன்பு, 36 நாய்களுடன் வாக்கிங் சென்றதே சாதனையாக இருந்தது. இதை முறியடித்த பெருமைக்கு சொந்தக்காரரான மிட்செல் ரூடி, தன்னுடன் வாக்கிங் வந்த நாய்கள் அனைத்தும், நல்ல உடல் திறன் கொண்டவை என்கிறார். இந்நாய்களை பொதுமக்கள் தத்தெடுக்கலாம் என, கே.கே9.ஆர்., அமைப்பு தெரிவித்துள்ளது.

இணையதளத்தில் வைரலாகும் இவரின் சாதனையை பாராட்டும் பலரும், ‘இதுவல்லவோ சாதனை’, ‘இதைவிட அதிக தெருநாய்கள் எங்கள் வீதிகளில் இருக்கின்றன; ஒருமுறை இந்தியா வாருங்கள்’ என, பலரும் வித்தியாசமான கமெண்ட்களை அள்ளி தெளிக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here