பினாங்கு, சரவாக் மற்றும் சபா மாநிலங்களில் இடியுடன் கூடிய கனமழை: MetMalaysia எச்சரிக்கை!

கோலாலம்பூர்:

பினாங்கு, சரவாக் மற்றும் சபா மாநிலங்களின் பல்வேறு பகுதிகளில் இன்று நண்பகல் வரை இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்று மலேசிய வானிலை ஆய்வு மையம் MetMalaysia எச்சரிக்கை விடுத்துள்ளது.

காலை 9 மணிக்கு வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, பினாங்கின் தென்மேற்கு, வடகிழக்கு மாவட்டங்கள், சரவாக் மீரி பகுதியின் சுஃபிஸ் மற்றும் மீரி ஆகிய இடங்கள், சபாவின் Tawau, Semporna, Kalabakan, Kunak ஆகிய பகுதிகள் இந்த மோசமான வானிலை எச்சரிக்கைக்கு உட்பட்டுள்ளன.

இதனிடையே, சபா கூடாட்டிற்கு வடக்கே கண்டறியப்பட்ட “Saudel” புயல் காரணமாக உள்ளூர் அளவில் எந்தவொரு குறிப்பிடத்தக்க தாக்கமும் ஏற்படாது என்று வானிலை ஆய்வு மையம் மற்றொரு அறிக்கையில் உறுதிப்படுத்தியுள்ளது.

இருப்பினும், பொதுமக்கள் அனைவரும் திடீர் வானிலை மாற்றங்கள் குறித்து விழிப்புடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here