மிரி:
இன்று அதிகாலை இங்குள்ள ஜாலான் கிராண்ட் பார்க்கில் உள்ள ஒரு மாடி வீட்டில் ஏற்பட்ட தீப்பரவலில், வீட்டின் 70 சதவீத பகுதிகள் தீயில் எரிந்து நாசமானது, அதேநேரம் தீயில் சிக்கிக்கொண்ட சீன நாட்டவரான 13 வயது சிறுமி இறந்து கிடக்க கண்டெடுக்கப்பட்டார்.
வீட்டை ஆய்வு செய்த பின்னர் யுவான் ரூஹான் என அடையாளம் காணப்பட்ட குறித்த சிறுமியின் எரிந்த உடல் இருந்ததைக் கண்டதாக, சரவாக்கில் உள்ள மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் செயல்பாட்டு மையத்தின் செய்தித் தொடர்பாளர் கூறினார்.
பின்னர், மேலதிக நடவடிக்கைகளுக்காக சடலம் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சொன்னார்.