பெரும்பான்மையான இந்தியர்கள் நஜிப்பின் அரச மன்னிப்பு கோரிக்கையை ஆதரிக்கின்றனர்

கோலாலம்பூர்: நஜிப் ரசாக்கின் அரச மன்னிப்புக்கான வலுவான ஆதரவு இந்திய சமூகத்தினரிடமிருந்து வருகிறது. பதிலளித்தவர்களில் 62.2% பேர் முன்னாள் பிரதமரின் முயற்சியை ஆதரிப்பதாக மெர்டேகா மையத்தின் சிந்தனைக் குழு நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. சீர்திருத்த அரசு சாரா நிறுவனமான புரோஜெக் சாமாவால் நியமிக்கப்பட்ட இந்த கணக்கெடுப்பு மார்ச் 27 முதல் ஏப்ரல் 17 வரை நடத்தப்பட்டது. இதில் 222 நாடாளுமன்றத் தொகுதிகளைச் சேர்ந்த 1,210 பேர் பதிலளித்தனர். கணக்கெடுப்பின்படி, நஜிப்பின் மன்னிப்புக்கான கோரிக்கை குறித்த பொதுக் கருத்து இன, அரசியல் அடிப்படையில் பிரிக்கப்பட்டுள்ளது.

தேசிய முன்னணி (BN) வாக்காளர்கள், மலாய் – முஸ்லிம் – பூமிபுத்ரா சமூகங்களின் பிரிவுகளின் பெரும்பான்மை ஆதரவை நஜிப் பெற்றிருந்தாலும், ஒட்டுமொத்த உணர்வும் அவருக்கு மன்னிப்பு வழங்குவதற்கான எந்தவொரு நடவடிக்கைக்கும் எதிரானது. பொது நம்பிக்கை துரோகம், நடந்து வரும் சட்ட வழக்குகள் மற்றும் குற்றத்தை ஒப்புக்கொள்ள மறுப்பது ஆகியவற்றைக் காரணம் காட்டி, பதிலளித்தவர்களில் மொத்தம் 57.8% பேர் அவரது மன்னிப்பு மனுவை எதிர்த்தனர்.

மாறாக, 32.7% பேர் மட்டுமே மன்னிப்புக்கு ஆதரவளித்தனர். பெரும்பாலும் நஜிப் நாட்டிற்கு அளித்த பங்களிப்புகளின் அடிப்படையில் என்று ப்ரோஜெக் சாமாவின் தலைவரான தாமஸ் ஃபேன் கூறினார். முஸ்லிம் பூமிபுத்ராக்கள் 50.5% பேர் நஜிப்பின் அரச மன்னிப்புக்கான முயற்சியை ஆதரித்து இரண்டாவது மிக உயர்ந்த குழுவை உருவாக்கினர். அதைத் தொடர்ந்து மலாய்க்காரர்கள் 43% பேர் இருந்தனர். நஜிப்பின் முயற்சியை சீன சமூகம் பெருமளவில்  95% விழுக்காட்டினர் எதிர்த்தனர். அதே போல் முஸ்லிம் அல்லாத பூமிபுத்ராக்கள் 51% பேர் அவரது மன்னிப்பு மனுவை நிராகரித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here