இந்தாண்டு அமைச்சுகளைக் குறிவைத்து 1,500 இணைய ஊடுருவல் சம்பவங்கள் பதிவு – பிரதமர் அலுவலகம் தகவல்

கோலாலம்பூர்:

இவ்வாண்டு அமைச்சுகளுக்கு எதிராக சுமார் 1,500க்கும் அதிகமான இணைய ஊடுருவல் சம்பவங்கள் நிகழ்ந்ததாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

செப்டம்பர் மாத நிலவரப்படி, அமைச்சுகளைக் குறிவைத்து 1,547 இணைய ஊடுருவல்கள் நடத்தப்பட்டதாக மலேசியப் பிரதமர் அலுவலக அமைச்சர் (கூட்டரசுப் பிரதேசங்கள்) டாக்டர் ஸாலிஹா முஸ்தஃபா கூறினார்.

அவை அனைத்தும் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டதாக கூரிய அவர், தேசிய இணையப் பாதுகாப்பு முகவை, தேசிய பாதுகாப்பு மன்றம், பிரதமர் அலுவலக அமைச்சு ஆகியவற்றின் உன்னிப்பான கண்காணிப்பும் உடனடி நடவடிக்கைகளும் இணைய ஊடுருவல் முயற்சிகள் தோல்வி அடைய காரணமாக இருந்ததாக சொன்னார்.

மலேசிய அரசாங்கத்தின் இணைய உள்கட்டமைப்பின் பாதுகாப்பு மற்றும் மீள்திறனை உறுதி செய்ய நாட்டில் உள்ள அனைத்து அமைப்புகளுக்குச் சிறந்த அணுகுமுறைகளை தேசிய இணைய ஒருங்கிணைப்பு, தளபத்திய நிலையம் தொடர்ந்து பரிந்துரை செய்யும் என்று, நாடாளுமன்றத்தில் டாக்டர் ஸலிஹா எழுத்துபூர்வமாக விளக்கமளித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here