மடானி வாகன எண்ணின் பதிப்புரிமை மீறல் தொடர்பாக, 1.3 மில்லியன் ரிங்கிட்டை இழப்பீடாகப் பெறுவதற்கு ஒரு தொழிலதிபர், போக்குவரத்து அமைச்சகம் மற்றும் சாலைப் போக்குவரத்துத் துறைக்கு ஏழு நாள் கெடு விதித்துள்ளார். Ilham Madani Sdn Bhd இயக்குனர் ஹசான் அஸ்ஹாரி ஹாஷிம், பதிப்புரிமைச் சட்டத்தின் 26B பிரிவின் கீழ் பதிவுசெய்யப்பட்ட “மடானி 1 முதல் மடானி 9999 வரையிலான சிறப்பு தொடர் வாகனப் பதிவு எண்களை உருவாக்குவதற்கான முன்மொழிவினை தான் பதிவு செய்தேன் என்று கூறுகிறார்.
ஏழு நாட்களுக்குள் இழப்பீடு வழங்கப்படாவிட்டால் சிவில் வழக்கு தாக்கல் செய்யப்படும் என்று நியூ ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் தெரிவித்துள்ளது. கோரிக்கை கடிதத்தின்படி, இந்த எண்களை விற்பனை செய்வதற்கு ஒத்துழைக்குமாறு ஹசான் கடந்த ஆண்டு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமுக்கு ஒரு முன்மொழிவை அனுப்பியிருந்தார். எவ்வாறாயினும், கடந்த ஆண்டு முதல் பரிமாறிக்கொள்ளப்பட்ட தொடர்ச்சியான கடிதங்கள் மூலம் அரசாங்கம் இந்த திட்டத்தை நிராகரித்ததாக அவர் குற்றம் சாட்டினார்.








