தங்காக்:
நேற்று இரவு பண்டார் பாரு சாகில் அருகே மூவார் – சிகாமாட் சாலையின் 32.5ஆவது கிலோ மீட்டர் தூரத்தில் நிகழ்ந்த விபத்தில் மாண்டவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அலாவூதீன் ஷா (வயது 20), முகமட் டர்வீஷ் ( வயது 19), சாங் ஜீ ஷியாங் ( வயது 20), பாங் செள சோங் ( வயது 18) ஆகியோர் அந்த நால்வர் எனக் கண்டறியப்பட்டுள்ளது.
அலாவூதீன் ஷா, சாங் ஜீ ஷியாங் , பாங் செள சோங் ஆகியோர் சம்பவ இடத்திலேயே மாண்ட நிலையில் முகமட் டர்வீஷ் தங்காக் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது உயிரிந்தார்.
மேலும் உயிரிழந்தவர்கள் அனைவரும் மோட்டார் சைக்கிள்களில் பயணித்தவர்கள் ஆவர்.
முன்னதாக இந்த விபத்து குறித்து இரவு 10.55 மணியளவில் போலீஸ் தரப்புக்கு புகார் கிடைத்தது.
மேலும் விபத்திற்கான காரணம் இன்னும் விசாரணையில் உள்ளதாக தங்காக் மாவட்ட போலீஸ் தலைவர் ரொஸ்லான் முகமட் தாலிப் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.




















