கனமழையின் எதிரொலி; தலைநகரில் பல பகுதிகளில் வெள்ளம்!

கோலாலம்பூர்:

இன்று பிற்பகல் பெய்த கனமழையைத் தொடர்ந்து தலைநகரில் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

இதில் ஜாலான் புடு மற்றும் ஜாலான் சுல்தான் (பெட்டாலிங் ஸ்ட்ரீட்) ஆகியவை அடங்கும் என்று DBKL தனது பேஸ்புக்கில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியது.

“தலைநகரைச் சுற்றி கனமழை பெய்து வருகிறது, DBKL பணியாளர்கள் தற்போதைய நிலைமையை கண்காணித்து வருகின்றனர்.

அதேநேரம் முக்கிய ஆறுகளில் நீர்மட்டம் இயல்பான அளவில் உள்ளது என்றும், நிலைமை கட்டக்குள் உள்ளது என்றும் அது தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here