பத்து பஹாட்டில் கல்லூரி பேருந்து உள்ளிட்ட 12 வாகனங்களை உள்ளடக்கிய விபத்து

பத்து பஹாட், ஜாலான் டான் ஸ்வீ ஹோ-ஜாலான் குளுவாங் போக்குவரத்து சாலை சமிஞ்சை சந்திப்பில் சாலை விபத்தில் சிக்கிய 12 வாகனங்களில் கல்லூரி மாணவர்களை ஏற்றிச் செல்லும் பேருந்து ஒன்றும் அடங்கும். வியாழக்கிழமை (ஏப்ரல் 17) காலை 10.40 மணியளவில் ஒரு பேருந்து, இரண்டு லோரிகள் மற்றும் ஒன்பது கார்கள் சம்பந்தப்பட்ட சம்பவம் நிகழ்ந்ததாக பத்து பஹாட் OCPD உதவி ஆணையர் இஸ்மாயில் டோல்லா கூறினார்.

எட்டு கல்லூரி மாணவர்களை ஏற்றிக்கொண்டு பேருந்து பத்து பஹாட் நகரப் பகுதியில் இருந்து ஜாலான் க்ளுவாங் நோக்கிச் சென்று கொண்டிருந்தது ஆரம்ப விசாரணையில் கண்டறியப்பட்டது. கட்டுபாட்டை இழந்த பேருந்து ஓட்டுநர் பின்னர் போக்குவரத்து விளக்கு சந்திப்பில் நின்று கொண்டிருந்த 11 வாகனங்கள் மீது மோதியதாக அவர் கூறினார்.

விபத்து காரணமாக வாகனங்கள் சேதம் அடைந்ததாகவும், ஆனால் யாருக்கும் பெரிய காயம் ஏற்படவில்லை என்றும் ஏசிபி இஸ்மாயில் மேலும் தெரிவித்தார். இரண்டு பேருக்கு மட்டுமே சிறிய காயங்கள் ஏற்பட்டன. 34 வயதான பெண் ஓட்டுநர் மற்றும் 46 வயதான பெண் பயணி இருவரும் சுல்தானா நோரா இஸ்மாயில் மருத்துவமனைக்கு மருத்துவ சிகிச்சைக்காக அனுப்பப்பட்டுள்ளனர் என்று அவர் கூறினார். ஆபத்தான மற்றும் கவனக்குறைவாக வாகனம் ஓட்டியதற்காக சாலைப் போக்குவரத்துச் சட்டம் பிரிவு 42இன் கீழ் வழக்கு விசாரிக்கப்பட்டு வருவதாக ஏசிபி இஸ்மாயில் மேலும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here