கோலாலம்பூர்:
சிலாங்கூர், கோலாலம்பூர், பினாங்கு உள்ளிட்ட 10 மாநிலங்களுக்கு இன்று பிற்பகலில் இடியுடன் கூடிய மழை, பலத்த காற்று வீசும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இன்று பிற்பகல் 2 மணிக்கு வானிலை ஆய்வு மையம் வழங்கிய ஆலோசனையின் அடிப்படையில், பினாங்கு (வடக்கு செபெராங் பிறை, மத்திய செபெராங் பிறை மற்றும் தெற்கு செபெராங் பிறை), சிலாங்கூர் (உலு சிலாங்கூர், கிள்ளான், கோம்பாக், பெட்டாலிங், கோலா லங்காட், உலு லங்காட் மற்றும் சிப்பாங்), கோலாலம்பூர் மற்றும் புத்ராஜெயா ஆகிய இடங்களில் இந்த வானிலை நிலவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவை தவிர பேராக் (கெரியான், லாரூட், மாடாங் மற்றும் செலாமா, உலு பேராக், கோல கங்சார், கிந்தா, கம்பார், பாடாங் பாடாங் மற்றும் முஅல்லிம்), கிளந்தான் (பாசீர் மாஸ், ஜெலி, தானா மேரா, மச்சாங் மற்றும் கோலக் கிராய்), திரெங்கானு (பெசூட் மற்றும் கெமாமன்) ), பகாங் (கேமரூன் ஹைலேண்ட்ஸ், ரவூப், குவாந்தான், பெக்கான் மற்றும் ரொம்பின்) மற்றும் ஜோகூர் (சிகாமாட், குளுவாங், மெர்சிங், பொந்தியா, கூலாய், கோத்தா திங்கி மற்றும் ஜோகூர் பாரு).
மேலும் சரவாக்கின் – ககூச்சிங், சமரஹான் (சிமுஞ்சான்), ஸ்ரீ அமன், பெடோங், சரிகேய், சிபு (சிபு மற்றும் செலாங்காவ்), மூக்கா, பிந்துலு (டாடாவ் மற்றும் பிந்துலு) மற்றும் மிரி (சுபிஸ், மிரி மற்றும் மருடி) – மற்றும் சபா – உள் பகுதி (பியூஃபோர்ட்), வெஸ்ட் கோஸ்ட் (பாப்பர், புட்டடன், பெனாம்பாங், கோத்தா கினாபாலு மற்றும் துவாரன்), தாவாவ் மற்றும் சண்டக்கான் (தெலுபிட், கினாபடங்கான் மற்றும் சண்டக்கான்) ஆகியவையும் அடங்கும் என்றும் அது தெரிவித்துள்ளது.
மலேசியாவில் தற்போது வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது குறிப்பிடத்தக்கது.









