பெரு நிறுவனங்கள் சமூக கடற்பாட்டுடன் செயலாற்ற வேண்டும் என்பதற்கு கேகே சூப்பர் மார்ச் முன்னுதாரணமாக விளங்குகிறது என்றால் அது மிகையாகாது. குறிப்பாக கேகே சூப்பர் மார்ட் பள்ளி மாணவர்களுக்கு பலவித உதவிகளை வழங்கி வருகிறது.
அதே வேலை மாணவர்கள் கல்வியில் மட்டுமல்லாமல் புறப்பாட நடவடிக்கைகளிலும் சிறந்து விளங்க வேண்டும் என்ற நோக்கில் 13ஆவது ஆண்டாக KOJU- KAI கராத்தே போட்டியை நடத்தி வருகிறது. ஜப்பானை தளமாக கொண்ட KOJU- KAI கராத்தே போட்டி கேகே சூப்பர் மார்ட் ஏற்பாட்டில் சவூத் சிட்டி பிளாசா மாலில் இரு நாட்கள் போட்டி நடைபெற்றது. இதில் இந்தியாவை சேர்ந்த 10 விளையாட்டு வீரர்கள் உள்ளிட்ட 450 பேர் பங்கேற்றனர்.
KOJU- KAI கராத்தே போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை எடுத்து வழங்கிய கேகே சூப்பர் மார்ட்டின் தலைமை செயல்முறை இயக்குநர் டத்தோ ஶ்ரீ டாக்டர் கேகே சாய் உரையாற்றுகையில் 13ஆவது ஆண்டாக KOJU- KAI கராத்தே போட்டியில் பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறேன்.
அதே போல் இந்த போட்டியை சிறப்பாக நடைபெற உறுதுணையாக இருப்பேன் இருந்த ஏற்பாட்டாளர்கள், கேகே சூப்பர் மார்ட் ஊழியர்களுக்கும் இவ்வேளையில் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இனி வரும் ஆண்டுகளிலும் KOJU- KAI கராத்தே போட்டி நடைபெறும் என்றார். தொடர்ந்து வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பதக்கங்களை பரிசுகளையும் எடுத்து வழங்கினார்.
இதற்கிடையில் கேகே சூப்பர் மார்ட் தலைமை செயல்முறை அதிகாரி டத்தோஶ்ரீ சாய் அவர்களின் பிறந்த நாள் விழா அனிச்சல் (கேக்) வெட்டி கொண்டாடினர். டத்தோ ஶ்ரீ கேகே சாய்க்கு மக்கள் ஓசை இயக்குநர் டத்தோ கோபால கிருஷ்ணன் சண்முகமணி பொன்னாடை போர்த்தி, மாலை அணிவித்து தனது பிறந்த நால் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார்.











