கோலாலம்பூர்:
மலேசியாவில் இதுவரை குரங்கம்மை தொற்று நோயால்,ஒருவர் மட்டும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும்,புதியதாக யாரும் பாதிக்கப்படவில்லை என்றும் சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் ஜுல்கிஃப்ளி அமாட் தெரிவித்தார்.
இதனை தடுக்கும் வகையில் சுகாதார அமைச்சு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்ததாகவும், நாட்டிற்குள் நுழைந்த 22.8 மில்லியனுக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகளிடம் சுகாதாரப் பரிசோதனை மேற்கொண்டதாகவும் அவர் மேலும் கூறினார்.
மேலும் கடந்த ஆண்டு ஜூலை 26 முதல் மலேசியாவில் மொத்தம் 10 குரங்கம்மை தொற்று பதிவாகியதாகவும், அவை அனைத்தும் இரண்டாம் வகுப்பைச் சேர்ந்தவை என்றும் அவர் சொன்னார்.









