கல்வி வளாகங்களில் மாணவர்கள் அறிமுகம் என்ற பெயரில் நடைபெறும் இதுபோன்ற ராகிங் நடவடிக்கைகளில், புதிதாக படிக்க வரும் மாணவர்களிடம் மூத்த மாணவர்கள் துன்புறுத்தலில் ஈடுபடுகின்றனர். இந்நிலையில், ராகிங்கின் ஒரு பகுதியாக அனிலை 3 மணிநேரம் ஒரே இடத்தில் நிற்கும்படி அவர்கள் கூறியுள்ளனர். இதில், மயக்கமடைந்த அனில், சுயநினைவை இழந்து கீழே சரிந்துள்ளார்.
இதன்பின்பு, மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்ட அனிலிடம், போலீஸார் விசாரணை நடத்தினர். இதில், 3 மணிநேரம் அந்த மாணவரை நிற்க செய்துள்ளனர் என போலீசிடம் அவர் கூறியுள்ளார். இதன்பின்னர் அவர் உடனே உயிரிழந்து விட்டார். அவருடைய உடலை போலீஸார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அதன் அறிக்கை வெளிவந்த பின்னரே மரணத்திற்கான காரணம் பற்றி தெரிய வரும்.









