உலகின் சக்திவாய்ந்த பெண்கள் பட்டியல்: 4 இந்திய பெண்கள் தேர்வு

அமெரிக்க ஊடக நிறுவனமான ஃபோர்ப்ஸ் (Forbes), உலகின் சக்தி வாய்ந்த 100 பெண்களின் பட்டியலை ( World’s 100 Most Powerful Women) வெளியிட்டுள்ளது. அரசியல், வணிகம், நிதி, ஊடகம் எனப் பல துறைகளில் ஆளுமையாக இருக்கும் பெண்கள் இந்தப் பட்டியலில் இடம்பிடித்துள்ளனர். இந்தியாவில் இருந்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ரோஷினி நாடார், சோமா மண்டல், கிரண் மஜும்தார் ஷா ஆகிய நான்கு பெண்கள் இந்தப் பட்டியலில் இடம்பிடித்துள்ளனர்.

நிர்மலா சீதாராமன்

64 வயதான மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 32ஆவது இடத்தைப் பிடித்து இருக்கிறார். இவர் 2019 மே மாதம் இந்தியாவின் நிதி அமைச்சராக நியமிக்கப்பட்டார். இந்தியாவில் அரசியல் மற்றும் கொள்கையில் அவர் ஆற்றிய பங்களிப்பிற்காக அங்கீகரிக்கப்பட்டுள்ளார்.

ரோஷினி நாடார்…

டெக்னாலஜி துறையைச் சேர்ந்த 42 வயதான ரோஷினி நாடார், 60ஆவது இடத்தைப் பிடித்து இருக்கிறார். ஹெச்.சி.எல் டெக்னாலஜி தலைமைப் பொறுப்பில் இருக்கும் ரோஷினி நாடார் மல்ஹோத்ரா ஐடி நிறுவனத்தை வழிநடத்தும் முதல் பெண்மணி என்ற பெருமையையும் பெற்றிருக்கிறார்.   ஹெச்.சி.எல் நிறுவனத்தின் நிறுவனர் ஷிவ் நாடாரின் ஒரே மகள். ஃபோர்ப்ஸால் உலகின் மிகவும் சக்திவாய்ந்த பெண்களின் பட்டியலில் 2019-ல் 54 -வது இடத்தையும், 2020 இல் 55-வது இடத்தையும், 2023 இல் 60ஆவது இடத்தையும் பிடித்துள்ளார் இவர்.

சோமா மண்டல்…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here