கோத்தா பாரு:
இன்று காலை நிலவரப்படி, கிளந்தானில் உள்ள மூன்று முக்கிய ஆறுகள் அவற்றின் எச்சரிக்கை அளவைக் கடந்துள்ளன.
publicinfobanjir.water.gov.my மற்றும் நீர்ப்பாசனம் மற்றும் வடிகால் துறை (JPS) இணையதளத்தின்படி, ரந்தாவ் பாஞ்சாங்கில் உள்ள கோலோக் ஆறு, மேலோர் பாலத்தில் உள்ள மேலோர் ஆறும் எச்சரிக்கை அளவை தாண்டியுள்ளன.
அதேநேரம் பாசீர் புத்தேவில் உள்ள செமெராக் ஆறு 2.42 மீ அளவோடு ஒப்பிடும்போது எச்சரிக்கை அளவு 2 மீற்றர் அளவைவிட தாண்டியது.
இதற்கிடையில், கோலா ஜம்புவில் உள்ள சுங்கை கோலோக் அதன் எச்சரிக்கை அளவைவிட 0.70 மீட்டர் உயர்ந்து, 2.05 மீட்டர் அளவில் உள்ளது என்றும் அது தெரிவித்துள்ளது.