சிகாமாட்டிலுள்ள இரப்பர் தொழிற்சாலையில் தீ..!

சிகாமாட், ஜாலான் கெஜுருத்தேரான் 4, தொழிற்பேட்டையில் இயங்கி வந்த இரப்பர் தொழிற்சாலை இன்று தீயில் எரிந்து நாசமானது.

குறித்த சம்பவம் தொடர்பில் நள்ளிரவு 12.18 மணிக்கு அழைப்பைப் பெற்ற பிறகு, சிகாமாட் மற்றும் லாபிஸில் உள்ள தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையங்களில் இருந்து இரண்டு அவசர மருத்துவ மீட்பு அதிகாரிகள் உட்பட 31 தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டனர்.

அவர்கள் வந்தவுடன், ஜலான் ஜெனுவாங் தொழில்துறை பகுதியில் இயங்கி வந்த குறித்த தொழிற்சாலை 90 சதவீதம் தீப்பிடித்து எரிந்ததை தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை பணியாளர்கள் கண்டறிந்தனர் என்று, அதன் செயல்பாட்டுத் தளபதி மர்சுகி இஸ்மாயில் கூறினார்.

தீயணைப்பு வீரக்கல் ஆறு மணி நேர முயற்சி இருந்தபோதிலும், எரியக்கூடிய பொருட்கள் தீயை மேலும் தூண்டியதால்,அவர்களால் கட்டிடத்தை தீயில் இருந்து காப்பாற்ற முடியவில்லை.

1995 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இந்த தொழிற்சாலை, இரசாயனங்கள் மற்றும் உரங்களை சேமிப்பதற்காக பயன்படுத்தப்படும் உயர்தர தொழில்துறை மொத்த பைகளை தயாரித்தது.

தொழிற்சாலை கிட்டத்தட்ட முற்றிலும் அழிந்துவிட்டதாகவும், இவ்விபத்தில் யாருக்கும் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என்றும் மர்சுகி கூறினார்.

தீ விபத்துக்கான காரணம் மற்றும் சேதம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது என்று அவர் மேலும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here