கோலாலம்பூர்:
பேராக்கில் வெள்ளம் சீரடைந்துள்ள நிலையில், சமீபத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாநிலமாக ஜோகூர் மாறியுள்ளது.
அங்கு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நான்கு குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 11 பேர், இன்று மதியம் 2 மணி முதல் சிகாமாட்டின் பாலாய் ராயா பத்து படாக்கில் உள்ள நிவாரண மையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இதற்கிடையில், தாங்காக் மாவட்டத்தில் உள்ள இரண்டு ஆறுகளிலும் (தெலோக் ரிம்பாவில் உள்ள சுங்கை கேசாங் மற்றும் கம்போங் ஸ்ரீ மாமோரில் உள்ள சுங்கை தாங்காக்) மற்றும் சிகாமாட்டில் ஒரு ஆறு (பூலோ கசாப்பில் உள்ள சுங்கை மூவார்) என்பன எச்சரிக்கை அளவை எட்டியுள்ளன.
அதேநேரம் திரெங்கானுவில், காலை 8 மணி நிலவரப்படி 398 பேராக இருந்த வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 250 பேராகக் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.