மலேசியாவில் அதிகரிக்கும் நிமோனியா பாதிப்பு; கடந்தாண்டு 18,181 பேர் உயிரிழப்பு

கோலாலம்பூர் :

நாட்டில் உயிர்க்கொல்லி நோய்கள் பட்டியலில் நிமோனியா எனப்படும் நுரையீரல் அழற்சி முதலிடம் வகிக்கிறது. அந்த வகையில் கடந்தாண்டு மட்டும் நிமோனியா காரணமாக மலேசியாவில் 18,181 பேர் உயிரிழந்துள்ளதாக தலைமை புள்ளியியல் நிபுணர் டத்தோஸ்ரீ டாக்டர் முகமட் உசிர் மஹிடின் தெரிவித்துள்ளார்.

நிமோனியா காரணமாக 2014ஆம் ஆண்டில் 9,250 பேர் உயிரிழந்துள்ளனர். ஆனால் நிமோனியாவால் மரணம் அடைந்தோர் எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்துள்ளது என புள்ளிவிவரத்துறையின் தரவுகள் எடுத்துக் காட்டுவதாக அவர் மேலும் கூறினார்.

Pneumonia penyebab utama kematian pada 2023

பக்டீரியா, கிருமி, பூஞ்சை தொற்று மூலம் நிமோனியா பாதிப்பு நோயை எதிர்கொள்ள தடுப்பூசி போடும் முயற்சிகளுக்கும் மேம்படுத்தப்பட்ட சுகாதாரப் பராமரிப்புக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. இருப்பினும் தகுந்த சிகிச்சை அளிக்கப்படாவிடில் மிகக் கடுமையான நுரையீரல் தொற்று ஏற்பட்டு உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நோய் அனைத்து வயதினரையும் பாதிக்கக்கூடியது. 65 வயதுக்கும் மேற்பட்டோரும் சிறாரும் இந்நோயால் எளிதில் பாதிப்படையலாம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

What is pneumonia? Here's everything you need to know about Malaysia's top  killer in 2023 | Malay Mail

நெஞ்சு சளியுடனான இருமல், காய்ச்சல், சாப்பிட விருப்பமின்மை, குழப்பநிலை, கடும் சோர்வு, மூச்சுப் பிரச்சினை ஆகியவை நிமோனியா பாதிப்பின் அறிகுறிகளாகும். இதில் பக்டீரியாவால் ஏற்படும் நிமோனியா நோயால் பாதிக்கப்பட்டோருக்கு நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்து (Antibiotics) தரப்படுகிறது. ஆனால் கிருமிகளால் ஏற்படும் நிமோனியாவுக்கு மருந்து இல்லை.

இதற்கிடையே, நிமோனியா பாதிப்பைத் தடுக்கும் நடவடிக்கைகளை மலேசியா முடுக்கிவிட்டுள்ளது.

நிமோனியா ஏற்படாமல் இருக்கவும் அந்நோயிடமிருந்து பாதுகாத்துக்கொள்ளவும் பல நியூமகோக்கல் (pneumococcal) தடுப்பூசிகள் உள்ளன. மேலும் குழந்தைகளும் 65 வயதுக்கும் மேற்பட்ட மூத்தோரும் அந்தத் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள வேண்டும் என்று ஊக்குவிக்கப்படுகிறது என்று அவர் சொன்னார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here