பெட்டாலிங் ஜெயா:
பழம்பெரும் இசைக்கலைஞர் டான்ஸ்ரீ அமாட் நவாப் சிலாங்கூர் கோம்பாக்கில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார்.
92 வயதான அமாட் நவாப் கான், நேற்று ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 24) பிற்பகல் 3.15 மணியளவில் மூச்சுத் திணறல் காரணமாக காலமானார் என்று அவரது மகன் நசீர் நவாப் உறுதிப்படுத்தினார்.
மறைந்த அமாட் நவாப் 200க்கும் மேற்பட்ட ஆல்பங்களைத் தயாரித்துள்ளதுடன், டத்தோ கதீஜா இப்ராஹிம், ரம்லா ராம், சுதிர்மான் மற்றும் ஹெட்டி கோஸ் எண்டாங் போன்வர்களுடன் பணியாற்றியுள்ளார்.
1950களில் கதீஜா இப்ராஹிம் பாடிய ‘மலேசியா ட்ரூலி ஆசியா’ உட்பட 2,000 பாடல்களை எழுதிய பெருமையும் இவருக்கு உண்டு.
கலைக்கான அவரது பங்களிப்புகள் அவருக்கு மலேசியா பல்கலைக்கழக புத்ராவிலிருந்து கெளரவ டாக்டர் பட்டத்தைப் பெற்றுத் தந்தது குறிப்பிடத்தக்கது.








