மலேசியாவில் கம்போடிய நாட்டு தொழிலாளர்கள் தருவிப்பு அதிகரிக்கும் என்று நம்பிக்கை – மனிதவள அமைச்சர்

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அவர்கள் கடந்த மார்ச் 27 அன்று கம்போடியாவிற்கு விஜயம் செய்தபோது கையெழுத்திட்ட இரண்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் விளைவாக, இனி கம்போடியாவில் இருந்து வெளிநாட்டு பணியாளர்களின் ஆட்சேர்ப்பு அதிகரிக்கும் என்று மலேசியா நம்புவதாக, மனித வளத்துறை அமைச்சர் வி சிவக்குமார் தெரிவித்தார்.

மலேசியாவிற்கு அனுப்பப்படுவதற்கு முன்னர், தந்து நாட்டு பணியாளர்களுக்கு தொழில் பயிற்சி மற்றும் தேவையான சலுகைகளை வழங்க கம்போடிய அரசாங்கமும் ஒப்புக்கொண்டது என்றார்.

மனித வள அமைச்சகத்தின் (KSM) பதிவுகளின்படி, புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்படுவதற்கு முன்பு, நாட்டில் மொத்தம் 4,422 கம்போடிய தொழிலாளர்கள் இருந்தனர், அவர்களில் 926 பேர் வீட்டுப் பணியாளர்கள்.

நமது நாட்டில் உள்ள பங்களாதேஷ் மற்றும் நேபாள தொழிலாளர்களுடன் ஒப்பிடுகையில் கம்போடியார்களின் எண்ணிக்கை குறைவானது. ஆனால் குறித்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதற்குப் பின், கம்போடியா நாட்டுத் தொழிலாளர்களின் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கலாம் என்று, தாம் நம்புவதாக சிவகுமார் மேலும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here