லண்டன்:லாட்டரி எடுக்கும் எல்லோருக்குமே அதிர்ஷ்டம் கிடைப்பதில்லை. ஒரு சிலருக்கு மட்டுமே எதிர்பாராத பம்பர் பரிசுகள் கிடைக்கும்.
அதன்படி, இங்கிலாந்தைச் சேர்ந்த நபர் ஒருவர் அங்குள்ள நேஷனல் லாட்டரியில் பரிசுச்சீட்டு வாங்கியுள்ளார்.இந்நிலையில், லாட்டரி மூலம் அவருக்கு ஒரே நாளில் 177 மில்லியன் பவுண்டு (1800 கோடி ரூபாய்) பரிசு கிடைத்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இங்கிலாந்தில் இதற்கு முன் ஒரு முறை 195 மில்லியன் பவுண்டுகளும், ஒருமுறை 184 மில்லியன் பவுண்டுகளும் பரிசாகக் கிடைத்துள்ளன.பிரபல இசையமைப்பாளர் ஹாரி ஸ்டைல்சை விட அதிக சொத்து மதிப்பு கொண்டவராக மாறியுள்ளார்.இதன்மூலம் இங்கிலாந்தைச் சேர்ந்த நபர் ஒரே நாளில் லாட்டரி மூலம் கோடீஸ்வரராகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.