எட்டு மாநிலங்களுக்கு நாளை வரை தொடர் கனமழை எச்சரிக்கை; மலேசிய வானிலை ஆய்வு மையம்

கோலாலம்பூர்:

தீபகற்ப மலேசியாவின் 8 மாநிலங்களில் நாளை வரை தொடர் கன மழை பெய்யும் என்று, மலேசிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அவற்றில் கிளாந்தான், திரெங்கானு, பேராக், பகாங், பெர்லிஸ், கெடா, பினாங்கு மற்றும் ஜோகூர் ஆகிய எட்டு மாநிலங்கள் இந்த வானிலையை எதிர்கொள்ளும் என்று அது தெரிவித்துள்ளது.

இந்நிலையில், கிளாந்தான் மாநிலத்தில் உள்ள தும்பாட், பாசீர் மாஸ், கோத்தா பாரு, ஜெலி, தானா மேரா, பாச்சோக், மச்சாங் ஆகிய பகுதிகளில் அபாயகரமான அளவில் மிக கனமழை பெய்யும் என்று அது இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அதேநேரம் திரெங்கானுவில் உள்ள கோலக் கிராய், பேராக் மாநிலத்தின் உலு பேராக் மாவட்டங்களிலும் பகாங் மாநிலத்தின் பெக்கான், ஜெரான்துட், ரொம்பின் ஆகிய பகுதிகளிலும் தொடர் கனமழை பெய்யும் என்கிறது மெட்மலேசியா.

மேலும் ஜோகூர் மாநிலத்தின் சிகாமாட், மெர்சிங், கோத்தா திங்கி ஆகிய மாவட்டங்களில் கடுமையான மழை பெய்யும் என்றும் அது கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here