கோலா பெராங்:
அஜிலின் கம்போங் புக்கிட் அபிட்டில் இன்று மாலை ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கிய இரு சகோதரரிகள் பரிதாபமாக உயிரிழந்தனர், அதேநேரம் மற்றொருவர் காயமடைந்தார்.
உயிரிழந்த புத்திரி சஜிதா அஸ்மான், 16, மற்றும் அவரது சகோதரி, சித்தி பாத்திமா, 13, ஆகியோரின் உடல்கள் முறையே மாலை 6.32 மற்றும் 6.59 மணிக்கு கண்டெடுக்கப்பட்டன.
அதேநேரம் உயிர் பிழைத்த உசைர், 17, மாலை 5.17 மணியளவில் காயத்துடன் கண்டுபிடிக்கப்பட்டார் என்று, திரெங்கானு தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் இயக்குநர், ஹசன் அசாரி ஓமர் கூறினார்.