அலோர் ஸ்டார்:
கெடா மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் கெடா மந்திரி பெசாரின் அதிகாரப்பூர்வ இல்லமும் வெள்ளத்தில் மூழ்கியது.
ஸ்ரீ மென்டலூனுக்குப் பின்னால் அமைந்துள்ள அனாக் புக்கிட் ஆற்றில் நீர் மட்டம் உயர்ந்ததால் இந்த வெள்ளம் ஏற்பட்டது என்று, மந்திரி பெசாரின் சிறப்பு ஊடக அதிகாரி ஹெல்மி காலிட் கூறினார்.
“நேற்று அதிகாலையில் இருந்தே உத்தியோகபூர்வ இல்லத்தின் பின்புறமுள்ள ஆற்றில் இருந்து தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது என்றும், ஆற்றங்கரையிலிருந்து வெகு தொலைவில் அமைந்துள்ள ஊழியர்களின் குடியிருப்புக்குள் காலை முதலே வெள்ளம் நுழையத் தொடங்கியது என்றும் அவர் சொன்னார். மேலும், அங்கு நீர் மட்டம் 0.5 மீட்டரை எட்டியுள்ளது, என்று அவர் நேற்றிரவு தொடர்பு கொண்டபோது கூறினார்.




















