குவா முசாங்:
ஜாலான் குவா முசாங்-ஜெலி சாலையின் 35 ஆவது கிலோமீட்டரில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவைத் தொடர்ந்து, குறித்த சாலை நேற்று இரவு 10 மணி முதல் அனைத்து வாகனங்களுக்கும் மூடப்பட்டன.
குறித்த பகுதியில் நிலத்தடி நீர் இயக்கம் இருக்கலாம் என்ற அச்சம் காரணமாக, அந்த சாலை மூடப்பட்டுள்ளது என்று, குவா முசாங் மாவட்ட காவல்துறைத் தலைவர், கண்காணிப்பாளர் சிக் சூன் ஃபூ கூறினார்.
மேலும் ஜாலான் குவா முசாங்-ஜெலி சாலை மூடல் காலங்களில், பொதுப்பணித்துறை (ஜேகேஆர்) அப்பகுதியில் கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டை மேற்கொள்ளவும் உதவும் என்றும் அவர் கூறினார்.
எனவே “தற்போதைக்கு, சாலைப் பயனர்கள் குவா முசாங்கிற்கு செல்ல ஜாலான் ஜெலவாங்-சுங்கை சாமில் மாற்று வழியைப் பயன்படுத்தலாம்” என்று அவர் தொடர்பு கொண்டபோது கூறினார்.