கோலாலம்பூர்:
வெள்ளத்தில் சிக்கி திரெங்கானுவில் மேலும் ஒருவர் பலியாகியுள்ளதாக தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனம் தெரிவித்துள்ளது.
நேற்று டுங்கூன், திரெங்கானுவில் பதிவாகிய இந்த மரணம், இதுவரை வெள்ளம் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை 6 பேராக அதிகரித்துள்ளது.
மேலும் வெள்ளம் காரணமாக கிட்டத்தட்ட 85,000 பேர் தமது வாழ்விடங்களைவிட்டு இடம்பெயர்ந்துள்ளனர் என்று, அது இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.