திருமணமான பெண்ணுடன் காதல்; பதின்ம வயது சிறுவன் படுகொலை

டுத்தவரின் மனைவியுடன் காதலில் திளைத்திருந்தவன் என்று சந்தேகிக்கப்படும் 16 வயது சிறுவன் கொடூரமாக குத்தி கொலை செய்யப்பட்டான்.

இச்சம்பவம் தாமான் கிள்ளான் உத்தாமா சூப்பர்மார்க்கெட்டிற்கு பின்பக்கத்தில் டிசம்பர் 1 ஆம் தேதி நிகழ்ந்தது.

இதுகுறித்து அன்றைய தினம் இரவு 11 மணியளவில் போலீஸ் தகவல் பெற்றது என்று வட கிள்ளான் ஓசிபிடி ஏசிபி எஸ்.விஜய ராவ் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து அங்கு விரைந்த போலீஸ்காரர்கள், அச்சிறுவன் கடுமையான காயங்களுடன் இறந்து கிடந்ததை கண்டனர்.

அவனது உடலிலும் கழுத்திலும் 20க்கும் அதிகமான குத்துக்காயங்கள் இருந்தன என்று இன்று வெளியிடப்பட்ட ஓர் அறிக்கையில் அவர் குறிப்பிட்டார்.

சம்பவம் தொடர்பில் 25 முதல் 40 வயதிற்குட்பட்ட 5 மியான்மார் பிரஜைகளை போலீஸ் கைது செய்திருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here