பேராக்கில் இந்த ஆண்டு RM49 மில்லியன் மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல்- 10,578 பேர் கைது

ஈப்போ:

பேராக்கில் இந்த ஆண்டு முழுவதும் போதைப்பொருள் தொடர்பான பல்வேறு குற்றங்களுக்காக காவல்துறையினரால் மொத்தம் 10,578 பேர் கைது செய்யப்பட்டனர், அத்தோடு அவர்களுடன் சம்மந்தமான வழக்குகளில் RM49 மில்லியன் மதிப்புள்ள போதைப்பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

போதைப்பொருள் கடத்தல் குற்றங்களுக்காக 1,891 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர், இதில் மரண தண்டனை விதிக்கும் அபாயகரமான மருந்துகள் சட்டம் (ADB) 1952 இன் பிரிவு 39B இன் கீழ் 559 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பேராக் துணை காவல்துறைத் தலைவர் டத்தோ அசிசி மாட் அரிஸ் கூறினார்.

அவரது கூற்றுப்படி, மேலும் 76 நபர்கள் சிறப்பு தடுப்பு நடவடிக்கைகள் சட்டம் 1985 இன் கீழ் கைது செய்யப்பட்டனர் என்றும், அவர்களில் பெரும்பாலோர் போதைப்பொருள் கும்பல்களின் மூளையாகவோ அல்லது திட்டமிடுபவர்களாகவோ செயற்பட்டவர்கள் என்று அவர் கூறினார்.

மேலும் மாநிலத்தின் போதைப்பொருள் குற்றப் புலனாய்வுத் துறை (JSJN) எட்டு சட்டவிரோத போதைப்பொருள் பதப்படுத்தும் ஆய்வகங்களையும் அகற்றியதுடன் அதனுடன் தொடர்புடைய மொத்தம் 21 நபர்களைக் கைது செய்தது.

இவைகள் தவிர போதைப்பொருள் வைத்திருந்த குற்றங்களுக்காக, 8,611 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று, இன்று பேராக் போலீஸ் படைத் தலைமையகத்தின் மைதானத்தில் நடைபெறும் வழக்கு சான்றுப்பொருட்டுகள் அகற்றல் நிகழ்வின் தொடக்க விழாவில் கலந்து கொண்டு அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here