கோலாலம்பூர்:
எதிர்காலத்தில் எந்தவொரு புதிய வரியையும் அறிமுகப்படுத்தும் எண்ணம் அரசாங்கத்திற்கு இல்லை என்று நிதி அமைச்சகம் (MoF) தெரிவித்துள்ளது.
அரசாங்கத்தின் தற்போதைய கவனம் தற்போதுள்ள வரி முறையை மேம்படுத்துவது மற்றும் ஏற்கனவே 2025 வரவுசெலவு திட்டத்தில் அறிவிக்கப்பட்ட வரி நடவடிக்கைகளை செயல்படுத்துவது என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அவ்வாறு புதிய வரியை அறிமுகப்படுத்துவதற்கு முன், அரசாங்கம் முதலில் வருவாய்த் தேவையைப் பரிசீலிக்கும் என்றும்; மேலும் தற்போதைய பொருளாதார நிலைமை; தேசிய வரி முறையின் ஒட்டுமொத்த கட்டமைப்பு, சவால்கள் என்பவற்றை ஆராயும் ,” என்று அது நாடாளுமன்ற இணையதளத்தில் எழுத்துப்பூர்வமாக பதிலளித்தது.