கோத்தா கினாபாலு:
இன்று (டிச. 5) அதிகாலை 4.54 மணியளவில் தாவாவில் 2.7 ரிக்டர் அளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.
நிலநடுக்கத்தின் மையம் 4.5 டிகிரி வடக்கு மற்றும் 118.1 டிகிரி கிழக்கில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் அமைந்துள்ளதாக மலேசிய வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
“குறித்த நிலநடுக்கம் தாவாவைச் சுற்றி உள்ள பல பகுதிகளில் உணரப்பட்டது,” என்று அது மேலும் கூறியது.
சபா தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை செயல்பாட்டு மையத்தின் செய்தித் தொடர்பாளரைத் தொடர்பு கொண்டபோது, நிலநடுக்கத்தைத் தொடர்ந்து அசம்பாவிதங்கள் எதுவும் ஏற்படவில்லை என்பதை உறுதிச் செய்தார்