கோலாலம்பூர்:
நகரத்திலுள்ள பொழுதுபோக்கு மையங்களில் போலீசார் நடத்திய ஒரு கூட்டு சோதனை நடவடிக்கையில் 77 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்த நடவடிக்கையில் காவல்துறை, கோலாலம்பூர் நகராண்மைக் கழகம் (DBKL), குடிநுழைவுத் துறை மற்றும் கூட்டரசுப் பிரதேச இஸ்லாமிய மதத் துறை (JAWI) ஆகியவை இணைந்திருந்த என்று நகர காவல்துறைத் தலைவர் ஆணையர் டத்தோ ருஸ்டி முகமட் இசா கூறினார்.
“இந்த நடவடிக்கையில் 23 வெளிநாட்டவர்கள் உட்பட மொத்தம் 41 சந்தேக நபர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்,” என்று அவர் இன்று ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 8) ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
அதே நேரத்தில் குடிநுழைவுத் துறை மொத்தம் 377 பேரை ஆய்வு செய்து, அதில் முறையான ஆவணங்கள் இல்லாத மொத்தம் 36 பேரைக் கைது செய்தது என்றார்.
இதற்கிடையில், சோதனையின் போது JAWI 33 பேரையும் கைது செய்தது, மேலும் கோலாலம்பூர் நகராண்மைக் கழகம் ஐந்து தண்டப்பண அறிவிப்புகளை வெளியிட்டது.
காவல்துறை நகரம் முழுவதும் தொடர்ந்து தீவிரமாக குற்றத்தடுப்பு நடவடிக்கையில் ஈடுபடும் என்றும், ஒழுக்கக்கேடான செயல்களில் ஈடுபட்டதாக கண்டறியப்பட்டால் பாரபட்சமின்றி எவர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுப்பதில் காவல்துறையினர் சமரசம் செய்ய மாட்டார்கள். “என்றும் அவர் சொன்னார்.
























