கோலாலம்பூர்:
தீபகற்ப மலேசியாவின் கிழக்குக் கடற்கரையின் சில பகுதிகளுக்கு டிசம்பர் 16-ஆம் தேதி வரை தொடர் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில், அந்த எச்சரிக்கை நிலை (மஞ்சள்) இலிருந்து தீவிரமான எச்சரிக்கை நிலைக்கு (ஆரஞ்சு) வரை உயர்த்தப்பட்டுள்ளது.
மேலும் வரும் டிசம்பர் 11-ஆம் தேதி வரை தீபகற்பத்தின் கிழக்கு, வடக்கு மற்றும் சபா ஆகிய மாநிலங்களில் தொடர்ந்து கனமழை பெய்யும் சாத்தியம் இருப்பதையும் மலேசிய வானிலை ஆய்வு மையம் உறுதிப்படுத்தியது.
அதேநேரம் தென் சீனக் கடல் பகுதியில் பலத்த காற்று, கடல் சீற்றம் ஏற்படும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து, பெர்லிஸ், கிளந்தான், திரெங்கானு, பகாங், பேராக், ஜொகூர் ஆகிய மாநிலங்களில் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அவ்வப்போது வானிலை நிலையைத் தெரிந்து கொள்ள மெட்மலேசியாவின் அதிகாரப்பூர்வ அகப்பக்கமான www.met.gov.my-யை நாடலாம்.
அதுமட்டுமல்லாமல், மெட்மலேசியாவின் அதிகாரப்பூர்வச் சமூக ஊடகத் தளங்களில் அவ்வப்போது பொதுமக்கள் வானிலை நிலையை அறிந்து கொள்ளலாம்.