7 நாட்களில் நடக்க முடியாத காரியங்களும் நடக்கும்

விநாயகப் பெருமானை நினைத்து தொடர்ந்து 7 நாட்கள் ஒரு குறிப்பிட்ட பரிகாரத்தை செய்து வந்தால் அது வேகமாக பலன் தரும். பணம், வேலை, ஆரோக்கியம், வீடு, கார் வாங்க வேண்டும் என எதை நினைத்து இந்த பரிகாரத்தை செய்தாலும் நிச்சயம் பலன் கிடைக்கும்.முழு முதற் கடவுளானவர் விநாயகப் பெருமான்.

எந்த காரியத்தையும் விநாயகப் பெருமானை வணங்கி விட்டு செய்தால் எந்த தடையும் ஏற்படாமல், அந்த காரியம் நிச்சயம் வெற்றிகரமாக முடியும் என்பது நம்பிக்கை. இதனால் எந்த ஒரு காரியத்தை துவங்குவதற்கும் முன்பாகவும் விநாயகர் பூஜை செய்வதை நாம் வழக்கமாகக் கொண்டுள்ளோம். சுப காரியங்கள் மட்டுமின்றி, பிரார்த்தனைகள், வேண்டுதல்கள், பரிகாரங்கள் என எதை செய்வதாக இருந்தாலும் விநாயகரை மனதார வணங்கி விட்டு, குலதெய்வத்தை மனதில் நினைத்து வழிபட்ட பிறகு அந்த காரியத்தை செய்தால், அது நிச்சயம் வெற்றிகரமாக முடியும். பிரார்த்தனை விரைவில் நிறைவேறும்.

பொதுவாகவே விநாயகரை வழிபட்டால் தடைகள் நீங்கி, வெற்றிகள் கிடைக்கும் என்பது அனைவருக்கும் தெரியும். அப்படிப்பட்ட விநாயகப் பெருமானை வேண்டி ஒரு குறிப்பிட்ட, எளிமையான பரிகாரத்தை தொடர்ந்து ஏழு நாட்கள் வீட்டில் செய்து வந்தால் வாழ்க்கை இனி நடக்கவே நடக்காது, நடப்பதற்கு வாய்ப்பே இல்லை என நீங்களே கைவிட்ட, நம்பிக்கை இழந்த விஷயங்கள் கூட கண்டிப்பாக நடந்தே தீரும். பலரது வாழ்க்கையிலும் அதிசயங்களை நிகழ்த்திய அற்புத பரிகாரம் இது. இதை முழு நம்பிக்கையுடன் செய்து முடிப்பவர்களுக்கு விநாயகரின் அருள் நிச்சயம் கிடைக்கும்.

காலையில் எழுந்து குளித்து விட்டு, வீட்டில் இருக்கும் விநாயகர் படம் அல்லது சிலையை தனியாக ஒரு மனையில் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். என்ன பூ கிடைக்கிறதோ அதைக் கொண்டு, அவரை அலங்கரித்து, மஞ்சள் குங்குமம் தொட்டு வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு ஒரு அகல் விளக்கு அல்லது காமாட்சி விளக்கில் நெய் விட்டு, பஞ்சு திரியுடன் வெற்றிவேரை சிறிது எடுத்து திரித்து தீபம் ஏற்றி வையுங்கள். எந்த ஒரு தெய்வத்தை நினைத்தும் வெற்றிவேர் கொண்டு விளக்கேற்றினால் நிச்சயம் பலன் கிடைக்கும். இது வீட்டில் உள்ள எதிர்மறை ஆற்றல்களை நீக்கி, நேர்மறை ஆற்றல்களை அதிகரிக்க செய்யும். தெய்வீக சக்தியை ஈர்க்கும் தன்மை கொண்டது.

இந்த விளக்கை ஏற்றி வைத்து விட்டு, “ஓம் கணபதியே நமஹ” என்று 108 முறை மனதார சொல்லி வழிபட வேண்டும். இந்த வழிபாட்டினை தொடர்ந்து 7 நாட்கள் செய்ய வேண்டும். முதல் நாள் வழிபாட்டினை துவங்கும் போது ஊசி நூல் எடுத்து ஒரு ஏலக்காயை எடுத்து, நீங்கள் என்ன காரியம் நடக்க வேண்டும் என நினைக்கிறீர்களோ, அந்த வேண்டுதலை மனதில் நினைத்துக் கொண்டு கோர்க்க வேண்டும். இரண்டாவது நாள், இதே போல் வழிபட்டு விட்டு உங்களின் வேண்டுதலை நினைத்து இரண்டாவது ஏலக்காயை அந்த ஊசி நூலில் கோர்க்க வேண்டும். இப்படி ஏழு நாட்களும், ஏழு ஏலக்காய்களை கோர்த்து, அதை மாலை போல் கட்டி, விநாயகருக்கு அணிவிக்க வேண்டும். இதை மாற்ற வேண்டிய அவசியம் இல்லை. எப்போதும் விநாயகர் கழுத்திலேயே இருக்கும் படி வைத்திருக்கலாம்.

இந்த முறையில் விநாயகரை வழிபட்டால் ஏழு நாள் நிறைவடைவதற்குள் உங்களின் வேண்டுதல் நிறைவேறுவதற்கான அறிகுறிகள் தெரியும். அதற்கு பிறகு வேறு ஏதாவது வேண்டுதல் இருந்தால், அந்த வேண்டுதலை நினைத்து இந்த பிரார்த்தனையை மீண்டும் ஏழு நாட்கள் தொடர்ந்து செய்யலாம். அப்படி செய்யும் போது ஏற்கனவே விநாயகருக்கு அணிவித்த ஏலக்காய் மாலையை எடுத்து, கால்படாத இடத்திலோ அல்லது ஓடும் நீரிலோ சேர்த்து விடலாம். மீண்டும் புதிய ஏலக்காய் மாலையை விநாயகருக்கு அணிவிக்கலாம். ஏலக்காய் மற்றும் வெற்றிவேர் ஆகிய இரண்டுமே தெய்வீக சக்தியையும், வெற்றிகளையும், நல்ல விஷயங்களையும் ஈர்க்கும் தன்மை கொண்டவையாகும். அதோடு விநாயகரின் அருளும் சேரும் போது வேண்டியது நிச்சயம் நடக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here