எட்டு மணி நேரம் வாகனத்தில் விடப்பட்ட 2 வயது சிறுமி மரணம்

பெட்டாலிங் ஜெயா:

நேற்று பாலர் பள்ளிக்கு அனுப்புவதற்காக தனது இரண்டு வயது சிறுமியை அழைத்து சென்ற அவரது தாயார், தனது மகளை பள்ளியில் விட்டுவிட்டதாக நினைத்ததன் விளைவாக, 8 மணி நேரம் கழித்து ஆரா டாமான்சாரா என்ற இடத்தில் அவரது வாகனத்திற்குள் அச்சிறுமி சுயநினைவற்ற நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.

இச்சம்பவம் குறித்து பிற்பகல் 3.40 மணியளவில் அவரது தரப்புக்கு தகவல் கிடைத்தது என்று பெட்டாலிங் ஜெயா மாவட்ட காவல்துறைத் தலைவர், துணை ஆணையர் முகமட் ஃபக்ருதீன் அப்துல் ஹமீட் கூறினார்.

விசாரணையின் அடிப்படையில், காலை 7 மணியளவில், பாதிக்கப்பட்டவரின் தாய் தனது இரண்டு குழந்தைகளை அருகிலுள்ள பள்ளிக்கும் , பாதிக்கப்பட்டவரை பாலர் பள்ளியிலும் இறக்கிவிட சென்றார்.

“பாலர் பள்ளிக்கு வந்ததும், பாதிக்கப்பட்டவரின் தாய் ஆன்லைனில் வணிக விஷயங்களை கவனிக்க சிறிது நேரம் காரை நிறுத்தினார், அதனால் பாதிக்கப்பட்டவரை அந்த இடத்தில் இறக்கிவிட அவர்  மறந்துவிட்டார்.

பின்னர் “பாதிக்கப்பட்டவரின் தாய் உடனடியாக வீடு திரும்பினார், மேலும் மாலை 3.35 மணியளவில் பாதிக்கப்பட்டவர் காரில் இருப்பதை உணர்ந்தார்” என்று அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்டவரின் தந்தை Mers 999 என்ற எண்ணை அழைத்தார், ஆம்புலன்ஸ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வரும் வரை பாதிக்கப்பட்டவருக்கு ஆரம்ப சிகிச்சை அளித்ததாக முகமட் ஃபக்ருதீன் கூறினார்.

“பாதிக்கப்பட்டவர் மேலதிக சிகிச்சைக்காக சுங்கை பூலோ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், ஆனால் அவர் இறந்துவிட்டார் என்று அறிவிக்கப்பட்டது.

“இன்று பிரேத பரிசோதனை நடத்தப்பட்டது மேலும் குழந்தைகள் சட்டம் 2001 இன் பிரிவு 31 (1) இன் படி வழக்கு விசாரிக்கப்பட்டது,” என்று அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here