ஈப்போ:
தெலுக் பாத்தேக்கில் முதலை இருப்பதாகக் கூறப்படுவது தொடர்பில் பேராக் வனவிலங்கு மற்றும் தேசிய பூங்காக்கள் துறை (Perhilitan) தொடர்ந்து அதன் சுற்றுப்புறங்களைக் கண்காணித்து வருகிறது.
முதலையை பிடிப்பது தொடர்பில் இதுவரை எந்தப் பொறிகளும் அமைக்கப்படவில்லை என்றும், இருப்பினும் அப்பகுதியில் உள்ள பொதுமக்களை எச்சரிக்கையுடன் இருக்குமாறு வலியுறுத்தியுள்ளதாகவும் அதன் இயக்குனர் யூசூப் ஷாரிப் தெரிவித்தார்.
மேலும் தெலுக் பாத்தேக் பகுதி முதலைகளின் வாழ்விடப் பகுதி என்பதால், பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்துவதுடன், எனவே அவற்றை தூண்டவோ அல்லது பொருட்களை வீசவோ வேண்டாம் என்றும் அவர் சொன்னார்.