சொத்துக்களை இழந்து திவால் ஆகப் போகிறார் பில் கேட்ஸ்.. எச்சரிக்கும் எலான் மஸ்க் – காரணம் என்ன?

உலக பணக்காரர்களான மைகோரோசாப்ட் நிறுவர் பில் கேட்ஸ் மற்றும் டெஸ்லா நிறுவர் எலான் மஸ்க் நீண்ட நாள் பகையாளிகள். பில் கேட்ஸை தனது கருத்துக்களால் அவ்வப்பொது எலான் மஸ்க் சீண்டுவது வழக்கம்.

டிரம்ப் ஆதரவால் தற்போது அமெரிக்க அரசியலில் மாபெரும் சக்தியாக உருவெடுத்துள்ள எலான் மஸ்க் சொத்துமதிப்பு ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது. எனவே தனக்கு சொந்தமான எக்ஸ் தளத்தில் மீண்டும் பில் கேட்ஸை சீண்டியுள்ளார்.’டெஸ்லா நிறுவனத்தின் வளர்ச்சிக்கு எதிராக பில்கேட்ஸ் முதலீடு செய்துள்ளார். ஆனால் டெஸ்லா உலகின் மதிப்புமிக்க நிறுவனமாக உருவெடுக்கும்பட்சத்தில் அது பில்கேட்ஸை கூட திவாலாக்கி விடும்’ என்று எலான் மஸ்க் தனது எக்ஸ் பதிவில் தெரிவித்துள்ளார்.

டெஸ்லாவுக்கு எதிராக பில்கேட்ஸ் ஷார்ட் பொசிஷனை அதிக அளவில் வைத்துள்ளார். பங்குச்சந்தையில் ஒரு நிறுவனத்தின் பங்குகள் சரிய போகிறது என்று கூறி அந்த விஷயத்தில் முதலீடு செய்வதே ஷார்ட் பொசிஷன் ஆகும்.டெஸ்லா நிறுவனத்தால் 1.5 பில்லியன் டாலரை இழந்ததாக கூறி கடந்த 2022 ஆம் ஆண்டு பில் கேட்ஸ் டெஸ்லா பங்குகளை ஷார்ட் செய்தார்.

இதன்படி டெஸ்லா திவாலாகும்பட்சத்தில் அது பில் கேட்ஸ்-கு அதிக லாபத்தை வழங்கும். இதற்கு, எலான் மஸ்க் கடுமையான எதிர்வினையாற்றினார். அதிலுருந்து இருவருக்குமிடையில் பகை வளர்ந்தது.இந்த நிலையில்தான், தற்போது தனக்குள்ள செல்வாக்கை பறைசாற்றும் விதமாக டெஸ்லா திவாலாகாமல் ஒரு வேலை அதற்கு நேர்மாறாக உலகின் மதிப்புமிக்க நிறுவனமாக உயர்ந்தால் அதனால் பில் கேட்ஸ் கூட சொத்துக்களை இழந்து திவாலாகி விடுவார் என்று மஸ்க் தம்பட்டம் அடித்துள்ளார்.

தற்போதைய நிலவரப்படி மைக்ரோசாப்டின் சந்தை மூலதனம் அல்லது சந்தை மதிப்பு $3.316 டிரில்லியன் ஆகும். அதேவேளை டெஸ்லாவில் சந்தை மதிப்பு $1.251 டிரில்லியன் ஆகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here