பூனையின் கழுத்தில் கயிற்றை கட்டி இழுத்துச் சென்ற ஆடவருக்கு RM10,000 அபராதம் விதித்தது நீதிமன்றம்

கோலாலம்பூர்:

தனது வளர்ப்பு பூனையை கழுத்தில் கயிற்றால் கட்டி, இழுத்து கொடுமைப்படுத்திய குற்றச்சாட்டில் ஆடவர் ஒருவருக்கு கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றம் RM10,000 அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளது.

கோ குவான் பான், 43, என்ற அந்த ஆடவர் தனக்கு எதிரான குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டதையடுத்து, நீதிபதி நோரினா ஜைனோல் அபிடின் இந்த உத்தரவை பிறப்பித்தார்.

விலங்குகள் சட்டத்தின் பிரிவு 44(1)(d) இன் கீழ் வாசிக்கப்பட்ட இந்தக் குற்றச்சாட்டுக்கு அதிகபட்சமாக RM50,000 அபராதம், ஓராண்டு வரை சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

இந்நிலையில் குற்றவாளி அபராதத்தை செலுத்தத் தவறினால் இரண்டு மாதங்கள் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று நீதிபதி நோரினா உத்தரவிட்டார்.

கடந்த நவம்பர் 21 அன்று ஜாலான் கிள்ளான் லாமாவின் ஸ்காட் கார்டனின் நடைபாதையில் இரவு 11.17 மணி முதல் 11.42 மணி வரையான காலப்பகுதியில் அவர் இக்குற்றத்தை புரிந்ததாகக் கூறப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here