ஸ்ரீ இஸ்கண்டார்:
உள்ளூர் உயர்கல்வி நிறுவனத்தைச் சேர்ந்த ஒரு மாணவர் தங்கும் விடுதியில், மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட தகராறில், 18 வயது இளைஞரை தாக்கியதாக மூன்று மாணவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில், கடந்த செவ்வாய்கிழமை மாலை 6.45 மணியளவில், அந்த தங்கும் விடுதியில் தனது மகன் சக மாணவர்களால் தாக்கப்பட்டதாக பாதிக்கப்பட்டவரின் தந்தையிடமிருந்து காவல்துறைக்கு புகார் கிடைத்தது,” என்று, பேராக் தெங்கா மாவட்ட காவல்துறைத் தலைவர் கண்காணிப்பாளர் ஹஃபீசுல் ஹெல்மி ஹம்சா கூறினார்.
“பாதிக்கப்பட்டவரின் காதில் வெட்டு, வலது புருவத்திற்கு மேல் வீக்கம், இடது கை மற்றும் காலில் காயங்கள் மற்றும் அவரது வயிறு மற்றும் கழுத்தில் சிவப்பு அடையாளங்கள் உட்பட பல காயங்கள் ஏற்பட்டன,” என்று அவர் கூறினார்.
புகாரைத் தொடர்ந்து, 18 மற்றும் 20 வயதுடைய மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உதவுவதற்காக மூன்று நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டு, பின்னர் போலீஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர் என்று அவர் மேலும் கூறினார்.
பாதிக்கப்பட்டவர் ஸ்ரீ இஸ்கண்டார் மருத்துவமனையில் வெளிநோயாளியாக சிகிச்சை பெற்றார் என்றும், கலவரம் செய்ததற்காக குற்றவியல் சட்டம் 147 பிரிவின் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருகிறது என்றும் அவர் சொன்னார்.