பிரிக்ஃபீல்ட்ஸில் உள்ள சொகுசுமாடிக் குடியிருப்பில் குடிநுழைவுத் துறை சோதனை; 40 வெளிநாட்டவர்கள் கைது

கோலாலம்பூர்:

ன்று சனிக்கிழமை (ஜூலை 13) அதிகாலை 4 மணிக்கு முடிவடைந்த நான்கு மணி நேர நடவடிக்கையின் போது கோலாலம்பூர் குடிநுழைவுத் துறை பிரிக்ஃபீல்ட்ஸில் உள்ள ஒரு சொகுசு குடியிருப்பில் 40 சட்டவிரோத குடியேறிகளை கைது செய்தது.

3 முதல் 61 வயதுக்குட்பட்ட 25 இந்தியர்கள், 10 இலங்கையர்கள், 2 பாகிஸ்தானியர்கள், 2 வங்களாதேசிகள் மற்றும் ஒரு மியன்மார் நாட்டவர் ஆகியோர் இந்த சோதனையில் கைது செய்யப்பட்டதாக அதன் தலைவர் வான் முஹமட் சௌபீ வான் யூசோப் தெரிவித்தார்.

“மலேசியாவில் தங்குவதற்கு பாஸ்போர்ட் அல்லது அனுமதி இல்லை, காலாவதியான பாஸ்போர்ட்களை வைத்திருப்பது மற்றும் அனுமதிக்கப்பட்ட காலத்தைவிட அதிக காலம் தங்கியிருப்பது உள்ளிட்ட பல்வேறு குற்றங்களில் அவர்கள் சந்தேகிக்கப்படுகிறார்கள்,” என்று அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

கைது செய்யப்பட்ட அனைவரும் குடிவரவுச் சட்டம் 1959/63 இன் கீழ் மேலதிக விசாரணைக்காக புக்கிட் ஜாலீல் குடிநுழைவு தடுப்பு முகாமிற்கு மாற்றப்பட்டுள்ளனர் என்று அவர் மேலும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here